"கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை" - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்
x
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, முழு உருவ வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது குடும்பத்தின் சார்பிலும், அறந்தாங்கி தொகுதி மக்கள் சார்பிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை, அறந்தாங்கியில் அமையும்  என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 80 ஆண்டு பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதி, கடந்த 60 ஆண்டுகாலமாக தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயித்தவர் என அவர் புகழாரம் சூட்டி உள்ளார். எனவே,  கருணாநிதிக்கு மத்திய அரசு உயரிய பாரத ரத்னா விருது வழங்கி, கவுரவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகரின் பிரதான சாலை ஒன்றுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுமாறு, தமிழக அரசுக்கும், திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்