கருணாநிதி உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் விசாரித்த குடியரசுத் தலைவர்
பதிவு : ஜூலை 27, 2018, 04:34 PM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலினிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.
 அப்போது,  கருணாநிதி பூரண உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என தான் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராம்நாத் கோவிந்த் கூறியதாக
 தெரிகிறது. இதேபோல் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதி உடல் நிலை குறித்து தொலைபேசி மூலம்  ஸ்டாலினுடன் கேட்டறிந்தார். 


கருணாநிதி உடல்நிலை - ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார் பிரதமர்



திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்ததாகவும், எந்த நேரத்திலும் உதவ தயாராக இருப்பதாகஅவர்களிடம்உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டாலினுடன் தொலைபேசி மூலம் ராகுல் பேச்சு கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் 





திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நலம் விசாரித்துள்ளார். ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல், கருணாநிதி உடல் நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டு அறிந்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



தொடர்புடைய செய்திகள்

தலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...

நெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

756 views

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தையை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய குழந்தையை நேரில் அழைத்து உரையாடினார் ஸ்டாலின்

1005 views

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியன் - நேரில் சென்று நலம் விசாரிக்கும் கட்சி தலைவர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

456 views

பிற செய்திகள்

சமயபுரம் தைப்பூசத் திருவிழா நிறைவு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

7 views

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

34 views

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

33 views

பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

26 views

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண் பேசியதால் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

381 views

100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலின் 27 வது ஆதீனம், நூறு வயதை கடந்ததையொட்டி அவரது ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்றது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.