"என் கண்களை பார்த்து பேச பிரதமர் மறுக்கிறார்" - ராகுல் காந்தி

இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி பேச்சு
என் கண்களை பார்த்து பேச பிரதமர் மறுக்கிறார் - ராகுல் காந்தி
x
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரான்சுக்கு பிரதமர் சென்ற உடன், ரஃபேல் விமானத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக விமர்சித்தார். பிரான்சுடன் ரகசிய ஒப்பந்தம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியதாகவும், ஆனால், அப்படி எதுவும் இல்லை என பிரான்ஸ் பிரதமர் தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். உண்மைக்கு மாறான தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்த போது, பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் தன் கண்களைப் பார்த்து பேச மறுக்கிறார் என்று ராகுல்காந்தி புகார் கூறிய போது, பிரதமர் புன்னகைத்தார். அப்போது தனது பேச்சை தொடர்ந்த  ராகுல்காந்தி, புன்னகையில் பதற்றம் தெரிவதாவும் கூறியதால் அவையில் பரபரப்பு நிலவியது.

ராகுல் காந்தி, சீன பிரதமருடன் பிரதமர் மோடி ஊஞ்சலாடிய போது, இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியது என்றும் குற்றம் சாட்டினார். தன் வாழ்க்கையில் ஒரு விமானம் கூட தயாரிக்காத ஒரு தொழில் அதிபரின் நிறுவனத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் ராகுல்காந்​தி குற்றம்சாட்டினார்.  பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்