2019 நாடாளுமன்ற தேர்தல் பணி - பொறுப்பாளர்களை நியமித்தது அ.ம.மு.க

2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், மண்டல பொறுப்பாளர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நியமித்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் பணி - பொறுப்பாளர்களை நியமித்தது அ.ம.மு.க
x
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உள்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளை 6 மண்டலங்களாக பிரித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. 

 சென்னையின் 3 தொகுதிகளும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் முதல் மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் மண்டலத்தின் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2-வது  மண்டலத்தின் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செந்தமிழன் உள்ளிட்டோரும்,  3-வது மண்டல பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் 5-வது மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதை தவிர நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாகவும் பொறுப்பாளர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை நியமித்துள்ளது.  வடசென்னை தொகுதி பொறுப்பாளராக ப.வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேபோல் இதர தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்