எதிர்க்கட்சிகளுக்கும் முன்மாதிரியாக அதிமுக விளங்குகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் மூலம் முடக்குவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கும் முன்மாதிரியாக அதிமுக விளங்குகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
"அரசியல் ரீதியாக அ.தி.மு.க. அரசை வீழ்த்த முடியாது"



ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் பழனிசாமி , தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் மக்களுக்கு உழைக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்று கூறினார். 

எதிர்க்கட்சிகளுக்கும் முன்மாதிரியாக அதிமுக விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி  பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் மூலம் முடக்குவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். அரசியல் ரீதியாக அதிமுக அரசை வீழ்த்தமுடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்