முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!
பதிவு : மே 11, 2022, 06:13 PM
உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தால் விவசாயியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தால் விவசாயியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உளுந்தூர்பேட்டை அருகே எறையூரை சேர்ந்தவர் ஜெய்சன். ஊராட்சி மன்ற உறுப்பினரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மெல்க்யூர் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், ஜெய்சனின் தந்தை வின்சென்ட் பவுல்ராஜை, ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையாலும் பலமாக தாக்கியது. பலத்த காயமடைந்த வின்சென்ட் பவுல்ராஜ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மெல்க்யூர் தம்பி ஜஸ்டின் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வின்சென்ட் பவுல்ராஜை தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமி.. என்னை விட்டுருங்க என்று ஒரு பலமுறை கெஞ்சியும், அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் வின்சென்ட் பால்ராஜை சரமாரியாக தாக்கும் வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

பிற செய்திகள்

குழந்தைகளுக்கான பிரத்யேக முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

குழந்தைகளுக்கான பிரத்யேக முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்...

19 views

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவுதினம்

ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

43 views

குறைந்த விலையில் விற்கப்படும் தக்காளி.! எங்கு தெரியுமா?

குறைந்த விலையில் விற்கப்படும் தக்காளி.! எங்கு தெரியுமா? ...

46 views

"ராஜீவ்காந்தி என்னை தள்ளிவிட்டார்.. அப்போது தான் அந்த.." - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளில் நடந்தது என்ன...?

31 views

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

குரூப் 2, குரூப் 2ஏ பதவிகள்-5,529 காலி பணியிடங்கள்-இன்று முதல்நிலை தேர்வு

20 views

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.