இலங்கையில் விறகுகளாகும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள்
பதிவு : மே 09, 2022, 11:19 AM
இலங்கைக் கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சி...
இலங்கையில் விறகுகளாகும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள்

இலங்கைக் கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளனர். அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை ஏலம் விடப்பட்டது. அதில் 130க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தால், பழுது பார்க்க முடியாத நிலையில் இருந்தன.

அவைகள் யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் உள்ள திறந்தவெளி பணிமனையில் பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இலங்கையில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏலம் விடப்பட்ட விசைப்படகுகள் உடைக்கப்பட்டு, ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பும், வேதனையும் தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

10 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

50 views

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்...

40 views

"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...

153 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.