"திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியா?" - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பதிவு : மே 04, 2022, 05:19 PM
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்...
"திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியா?" - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், திமுக தலைமையிலான அரசு, மதசார்பற்ற அரசு என கூறி வரும் நிலையில், பண்டிகைகள் தொடர்பாக அவர் தெரிவித்த சில கருத்துகளை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன் தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு, நாடுமுழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார். பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை, வழங்கி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தங்களது கூட்டணிக்கு மதசார்பற்ற கூட்டணி என பெயரிட்டு அதன்படி செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

1 views

BREAKING || பெட்ரோல் - டீசல் விலை குறைந்தது

BREAKING || பெட்ரோல் - டீசல் விலை குறைந்தது

5 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

"கல்வி வளர கிறிஸ்தவ மடாலயங்களே காரணம்" - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற காரணமாக இருந்தது கிறிஸ்தவ மடாலயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

7 views

“மேடைக்கு கீழ வேல பாக்க நானு... பேச அவரு தான்...“ “வாடா, போடானு தான் பேசிப்போம்..“ -பொன்முடியை பற்றி கலகலப்பாய் பேசிய நேரு...

“மேடைக்கு கீழ வேல பாக்க நானு... பேச அவரு தான்...“ “வாடா, போடானு தான் பேசிப்போம்..“ -பொன்முடியை பற்றி கலகலப்பாய் பேசிய நேரு...

5 views

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.