சென்னை ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - விஷ்வநாத் ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு
பதிவு : மே 02, 2022, 08:29 PM
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.44
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்காக 2 ஆடவர் மற்றும் 2 மகளிர் பிரிவுகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவு முதல் அணியில் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹரி கிருஷ்ணா, அர்ஜுன், எஸ்.எல். நாராயணன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோரும் இரண்டாவது அணியில், நிஹல் சரின், குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, சத்வனி ரனாக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், மகளிர் பிரிவு முதல் அணியில் கொனேரு ஹம்பி, ஹரிகா, ஆர். வைஷாலி, தானியா சச்தேவ், குல்கர்ணி பக்தி ஆகியோரும் இரண்டாவது அணியில் வந்திகா அகர்வால், செளம்யா சுவாமிநாதன், கோம்ஸ் மேரி ஆன், பத்மினி, திவ்யா தேஷ்முக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக விஷ்வநாத் ஆனந்த் செயல்பட உள்ளார். மேலும், சென்னையில் நடைபெற உள்ள இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷ், சசிகிரண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

98 views

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

17 views

ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

16 views

கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

கடை ஊழியர்கள் கண்முன்னே தங்கத்தை லவட்டிய பெண் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

ஈரோட்டில் உள்ள நகை கடையில், தங்க நாணயங்களை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 views

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.