மேற்கு வங்கத்தில் பயணிகள் விமான விபத்து - விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு
பதிவு : மே 02, 2022, 08:17 PM
மேற்குவங்கத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து நேற்று மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட டர்புலன்ஸ் காரணமாக பயங்கரமாக குலுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 11 பயணிகளுக்கு பலத்த காயமும், 40 பயணிகளுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து, காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த விபத்து குறித்து இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் கவனத்துடன் இந்த விவகாரம் கையாளப்பட்டு விரைவில் விபத்திற்கான காரணம் உள்ளிட்டவை வெளியிடப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

9 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

22 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

தமிழகத்தில் மீண்டும் பரவுகிறதா ஒமிக்ரான்?

தமிழகத்தில் மீண்டும் பரவுகிறதா ஒமிக்ரான்?

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.