மீண்டும் கேப்டனாக தோனி - பின்னணி என்ன...?
பதிவு : மே 01, 2022, 04:37 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார் ஜடேஜா.... அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுகிறார்.... தோனியின் வழிகாட்டுதலில் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என நடப்பு ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பாக அறிவித்த சென்னை நிர்வாகம்,...

தற்போது சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகுகிறார்.... மீண்டும் கேப்டனாக தோனி செயல்படுவார் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தும் நடப்பு ஐபிஎல் தொடரில் பிரகாசிக்கத் தவறி வருகிறது சென்னை....

ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் சென்னையின் செயல்பாடு, 2020-ம் ஆண்டு சீசனின் நீட்சியாக உள்ளது.

சிறப்பான ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமையாதது, பவுலிங் லைன்-அப் பலகீனமாக இருப்பது, பீல்டிங்கில் கேட்ச்சுகளை தவறவிடுவது என சென்னையின் தொடர் தோல்விக்கு காரணங்கள் அடுக்கப்பட்டாலும்,.....

அணியின் கேப்டனாக ஜடேஜா எடுத்த முடிவுகள், சென்னையின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

எந்த நேரத்தில் எந்த பவுலரைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஜடேஜாவுக்கு அனுபவம் போதவில்லை எனக் கூறப்படும் நிலையில்,... 

கேப்டன் பொறுப்பேற்றபின் பேட்டிங், பவுலிங், ஏன்... ஃபீல்டிங்கிலும் கூட கேட்ச்சுகளைக் கோட்டைவிட்டு தடுமாறி வருகிறார் ஜடேஜா....

8 போட்டிகளில் ஆடி, வெறும் 112 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை மட்டுமே ஜடேஜா எடுத்திருப்பதற்கு, கேப்டன்ஷிப் பிரஷரே பிரதானக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதுமட்டுமின்றி டீப் திசையில் ஃபீல்டிங் செய்வதை ஜடேஜா வாடிக்கையாக வைத்திருப்பதால் பெரும்பாலான சமயம், தோனியே முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.

தோனி களத்தில் இருப்பதால் பெயரளவிற்கே கேப்டனாக ஜடேஜா செயல்பட்டார் என்றும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

என்னதான் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டாலும் விரைவில் அவர் 41 வயதை நெருங்க உள்ளார்.

ஆதலால் அடுத்துவரும் சீசன்களுக்காக புதிய கேப்டனை சென்னை தேடுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதே யதார்த்தம்....

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

119 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

86 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

70 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

50 views

பிற செய்திகள்

ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்..!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நார்வே இளம் வீரர் கேஸ்பர் ரூட் (rudd) முன்னேறி உள்ளார்...

0 views

விறுவிறுப்படையும் இத்தாலி சைக்கிள் பந்தயம் : 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றி..!

இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றிபெற்று உள்ளார்.

0 views

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்..!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்...

5 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

30 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.