அரசியல் சர்ச்சைக்கு அஜித் வைத்த முற்றுப்புள்ளி...
பதிவு : மே 01, 2022, 03:35 PM
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்குமாரின் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்....
அல்டிமேட் ஸ்டார்...

ஆரம்பகாலக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இப்படியே அழைக்கப்பட்டார் அஜித்குமார்...

சில நாட்களில் அந்த பட்டம் வேண்டாம் என அஜித் முடிவெடுக்க, அப்போது சூறாவளியாக வந்திறங்கியது தீனா பட காட்சி....

அன்று தொடங்கி தல என்றே செல்லமாக அழைக்கப்பட்டார் அஜித்குமார்... ஆனால் அதையும் விரும்பாதவர், டிசம்பரில் தன்னை பட்டப்பெயர் வைத்து அழைக்கவேண்டாம் என்று அறிக்கையே வெளியிட்டார். அன்று முதல் ரசிகர்கள் மனதில் ஏ.கே.வானார் அஜித்குமார்.

ஏராளமான பிளாக்பஸ்டர்களும், தொடர் தோல்விகளும் நிறைந்தது அஜித்தின் திரைவாழ்க்கை.. என் அளவுக்கு தொடர் தோல்வியை வேறு யாராவது கொடுத்திருந்தால் அவர்கள் சினிமா துறையிலேயே இருந்திருக்க முடியாது என்று அஜித்தே கூறிய வரலாறும் உண்டு...

இதுமட்டுமல்ல, நேருக்கு நேர், நான் கடவுள், கஜினி, நந்தா, காக்க காக்க போன்ற படங்கள் அஜித் நழுவவிட்ட படைப்புகள் என்பது அவரது ரசிகர்கள் வருந்தும் செய்தி..

இதுஒருபக்கம் என்றால், உடல்ரீதியாகவும் அவர் சந்தித்த சோதனைகள் பல...

2002 காலக்கட்டத்தில் கார் பந்தய விபத்தில் சிக்கி முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்த போது, அஜித் மீண்டு வருவதே சிரமம் என பேசப்பட்டது... ஆனால் மீண்டு வந்து பீனிக்ஸ் பறவையாக பறந்தார்.

ஆரம்பம் படம் சமயத்தில் மீண்டும் விபத்தில் சிக்கினார். காலில் அடிப்பட்டது.. அறுவை சிகிச்சை செய்தார்... நடிப்புக்கு திரும்பினார்.

வாழு வாழவிடு என்ற வாசகத்துடன் ரசிகர்களுடன் உறவாடும் அஜித், சினிமாவை தாண்டி பொதுவெளியில் தோன்றுவது அரிது.. ஆனாலும் அவ்விடத்தில் பேசுபொருளாக அவர் இருப்பதே அவரது ஆளுமை சொல்லும் செய்தி.

ஒருமுறை, திரைத்துறையினரை கட்டாயப்படுத்தி மிரட்டி நிகழ்ச்சிகளுக்கு வரவழைப்பதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்பு பொதுமேடையில் அஜித் போட்டு உடைத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த சமயத்தில் நிச்சயம் அதிமுகவின் எதிர்காலம் அஜித்குமார் என்ற பேச்சுகளும் உலாவின...

அதனை கண்டுகொள்ளாதவர், 2019ல் அவரது ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக சர்ச்சை எழுந்தபோது, தனக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் அஜித்.

இப்படி சினிமா தொடங்கி தான் தொட்ட அனைத்திலும் அஜித்குமார் தனி ரகம்... அதுவே ரசிகர்கள் அவரை விரும்புவதற்கான அடிநாதம்....

தொடர்புடைய செய்திகள்

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

86 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

69 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

17 views

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

10 views

பிற செய்திகள்

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

18 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

43 views

மார்வெல்லின் 'தோர் - லவ் அண்ட் தண்டர்'- படத்தின் டிரைலர் வெளியீடு..!

மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படமான 'தோர் - லவ் அண்ட் தண்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது...

55 views

#Breaking : டி.ராஜேந்தர் உடல்நிலை ... சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை ... சிம்பு வெளியிட்ட அறிக்கை...

118 views

"ஆண்டவரே நீங்களா!" - திடீர் என்ட்ரி கொடுத்த கமல் - திக்குமுக்காடி போன ரசிகர்கள்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...

135 views

டி.ராஜேந்தர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

டி.ராஜேந்தர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.