வாங்காத பொருளுக்கு கடன்.. திடீர் மெசெஜ்ஜால் அதிர்ந்த மக்கள் - அம்பலமான பர்னிச்சர் கடை ஓனரின் மோசடி
பதிவு : ஏப்ரல் 29, 2022, 01:50 PM
வீட்டு உபயோக பொருட்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பர்னிச்சர் கடை ஒன்று உள்ளது. இக்கடையில்  வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு சிலர்  தங்களது அடையாள அட்டைகளின் நகல்களை கொடுத்து,  தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களையும் வாங்கிக்கொண்ட கடை உரிமையாளர், லோன் கிடைத்ததும் பொருட்கள் தருகிறேன் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் வாங்காத வீட்டு உபயோக பொருட்களுக்கு, லோன் வாங்கியது போல் தவணை தொகையை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களை பயன்படுத்தி  தங்களது பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறி வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவினர் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி  பாதிக்கப்பட்ட மக்களை வாழப்பாடி போலீசார் சேலத்திற்கு திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வீட்டு உபயோக பொருட்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வாழப்பாடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

85 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

67 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

47 views

பிற செய்திகள்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

95 views

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

16 views

ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

16 views

கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

கடை ஊழியர்கள் கண்முன்னே தங்கத்தை லவட்டிய பெண் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

ஈரோட்டில் உள்ள நகை கடையில், தங்க நாணயங்களை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 views

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.