இந்தி தேசிய மொழியா? மோதிகொள்ளும் உச்ச நட்சத்திரங்கள்
பதிவு : ஏப்ரல் 28, 2022, 04:39 PM
இந்தி மொழி தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும், கன்னட நடிகர் கிச்சா சுதீபும் ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்ட விவகாரம் பேசு பொருளாகி உள்ளது.
சமீப காலமாக தென் இந்திய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், படைப்பு மற்றும் விமர்சன ரீதியாகவும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, அண்மையில் வெளியான கே.ஜி.எப். 2 திரைப்படம்...

கன்னட திரைப்படமாக இருந்தாலும், இந்தி, தமிழ் உள்ளிட்ட கிட்டதட்ட வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது, கே.ஜி.எப். 2...

இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 படம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும், கன்னட நடிகர் கிச்சா சுதீபும், ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்ட விவகாரம் பேசு பொருளாகி உள்ளது.

KGF - 2 படத்தின் வெற்றி குறித்து பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், "ஒரு கன்னட படம், இந்தியா முழுவதுக்குமான பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டதாக எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால், ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல, பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது, அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன, ஆனால் வெற்றி பெற போராடுகின்றன, இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம் என தெரிவித்தார்...

இதனிடையே, கிச்சா சுதீபின் பேச்சை கண்டிக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

"இந்தி தேசிய மொழி இல்லை என்றால் கன்னட படங்களை ஏன், இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், இப்போதும், எப்போதும் இந்தி தான் இந்தியாவின் தாய் மொழி மற்றும் தேசிய மொழி எனவும் அவர் குறிப்பிட்டு விவகாரத்தை பெரிதாக்கினார்.

இதற்கு பதில் ட்விட் செய்த கிச்சா சுதீப், நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்கு புரிந்தது. ஆனால், எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால் உங்கள் நிலை என்னவாகும், நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா என கேள்வி எழுப்பினார்.

இதனிடையே நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்தி கொண்டனர்.

நீங்கள் எனது நண்பர், நாங்கள் எல்லா மொழியையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் எல்லாரும் மதிக்க வேண்டும் என விரும்புவதாக அஜய் தேவ்கன் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கிச்சா சுதீப்,  தங்கள் மீது குற்றம் சுமத்தவில்லை என கூறி டிவிட்டரில் மொழிப் போரை ஒரு வழியாக முடித்து வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

198 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

119 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

49 views

பிற செய்திகள்

"ராஜீவ்காந்தி என்னை தள்ளிவிட்டார்.. அப்போது தான் அந்த.." - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளில் நடந்தது என்ன...?

30 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

30 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

13 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.