பதவியை துறந்தார் ஈ.பி.எஸ்
பதிவு : ஏப்ரல் 28, 2022, 01:48 PM
அதிமுகவில், 12 ஆண்டுகளாக வகித்துவந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி துறந்துள்ளார்.
பதவியை துறந்தார் ஈ.பி.எஸ்

அதிமுகவில், 12 ஆண்டுகளாக வகித்துவந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி துறந்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டு அதிமுகவில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தின், கிளை செயலாளர் பொறுப்பை வகித்தார்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் அணியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார்.

 அதனைத் தொடர்ந்து கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, அதிமுகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராக பதவி வகித்தார்.

அதன் பின்னர், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி வகித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல், மீண்டும் சேலம் மாவட்டத்தின் புறநகர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் மீண்டும் மாவட்டச் செயலாளராக போட்டியிட விருப்ப மனுவை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

எதிர்பாரத விதமாக அவரின்  நெருங்கிய நண்பரான இளங்கோவனை அந்த மாவட்டத்திற்கு செயலாளராக அதிமுக தலைமை தற்போது அறிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி துறந்துள்ளார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சித் தலைவர் என்ற முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் வகிப்பது சரியல்ல என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனையை ஏற்றே, தன்னுடைய மாவட்டச் செயலாளர் பதவி துறந்துள்ளார் என அதிமுகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் மொத்தம் 17 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

180 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

43 views

பிற செய்திகள்

டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

16 views

#Breaking : இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்...

10 views

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

28 views

#BREAKING || பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்

பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்...

22 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

55 views

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.