ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை
பதிவு : ஏப்ரல் 26, 2022, 06:59 PM
நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை...

நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல் ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றார்.

இதன்படி ரேஷன் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் பிரத்யேக இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதை நிரப்பி விண்ணப்பித்து, பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 803 அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளில், 98 புள்ளி இரண்டு மூன்று சதவிகித அட்டைகளுக்கு கைரேகை சரி பார்ப்பின் மூலம், பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். கைரேகை மற்றும் இதர பிரச்சனைகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கண் கரு விழி சரி பார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை ஏற்கனவே உள்ளது என்றும், இதனடிப்படையில், தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

 இத்திட்டம், தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

238 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

#Breaking || அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

"தந்தையை கொன்றவர்களை பார்க்கும் போது வலி ஏற்பட்டது" - ராகுல் காந்தி

தந்தையின் மரணம் தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கற்று கொடுத்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

201 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.