சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : ஏப்ரல் 26, 2022, 08:22 AM
நடிகர் சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்கான சம்பளம், 4 கோடியே 80 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதாகவும், அதை வழங்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரியும், நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். சம்பள பாக்கி வரும் வரை, ஞானவேல்ராஜா தயாரித்துள்ள பத்துதலை, சீயான் 61, ரிபெல் படங்களை வெளியிட தடை விதிக்கவும் கோரினார். இதற்கு ஞானவேல்ராஜா தாக்கல் செய்த பதில் மனுவில், உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நட்டம், விநியோகஸ்தர்கள் பிரச்சனை குறித்த தகவலை சிவகார்த்திகேயன் மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதை அபராதத்துடன் தள்ளுபடி செய்யுமாறும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்தார். ஞானவேல் ராஜா படங்களுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

128 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

37 views

பிற செய்திகள்

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

106 views

'விக்ரம்' படம் - புதிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும், ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

14 views

"முதல்வர் மு.க.ஸ்டாலினால் எலான் மஸ்க் உடன் கூட உணவருந்த முடியும்" -நெகிழ்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மறைந்த சண்முகநாதனின் மகள் வழி பேரன் அர்விந்த் ராஜ் திருமணம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது...

21 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

பத்தல பத்தல - கமல்ஹாசன் மீது புகார் சினிமாவில் கமல்ஹாசனை சுற்றிய சர்ச்சைகள்...

பத்தல பத்தல - கமல்ஹாசன் மீது புகார் சினிமாவில் கமல்ஹாசனை சுற்றிய சர்ச்சைகள்...

75 views

மேடையில் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கோரி விடைபெற்ற கமல்ஹாசன்

இதுவரை தான் ஒரு நடன உதவியாளராகவே நினைத்து வருவதாக பழைய நினைவலைகளை பகிர்ந்து கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார்...

473 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.