எங்கே இருக்கிறது கைலாசா?... துப்பு கொடுத்தார் நித்தியானந்தா - ஆனால் ஒரு கன்டிஷன்...!
பதிவு : ஏப்ரல் 25, 2022, 03:37 PM
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என உலகமே தேடிக் கொண்டிருக்க, முதல் முறையாக தான் இருக்கும் இடம் பற்றி அவர் சூசகமாக தகவல் வெளியிட்டுள்ளார்...
"என்ன வேண்ணா நடக்கட்டும் நா சந்தோஷமா இருப்பேன்..." என்று இளைஞர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் அளவுக்கு சிஷ்யைகள் சூழ... தனி நாடு... தனி வங்கி... தனி நாணயம்..."நானே ராஜா நானே மந்திரி" என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருபவர் நித்யானந்தா...

பாலியல் சர்ச்சை புகழ் நித்தியானந்தா, கடவுளைப் பற்றி புகழ்வதற்கும் ஒரு படி மேலே போய் "நான் தான் கடவுள்" என்று கடவுள்களையும் அலற விடுபவர்...

வாழ்க்கையிடமே பிரேக்கப் ஆகி நைண்டீஸ் கிட்ஸ் வாடிக்கிடக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தினம் தினம் நித்யானந்தா இணையத்தில் வெளியிடும் வீடியோக்கள் தனி ரகம்.

வாழ்வின் லட்சியமே எப்படியாவது கைலாசாவுக்கு சென்று விடுவதுதான் என லட்சக்கணக்கான இளைஞர்கள் இவரிடம் விண்ணப்பம் செய்து காத்திருப்பது இதனால்தான். ஆனால், கைலாசாவுக்குள் நுழைவது அவ்வளவு சுலபமில்லையாம்.
எங்க தான்பா இருக்கு கைலாசா? என இந்த இடத்தை காவல்துறையினரும் தேடாத நாளில்லை... அப்படி தன் மீது "தீரா" அன்புடன் தேடுபவர்களுக்காக ஒரு "துப்பு" கொடுத்துள்ளார் "நித்தி"...

கைலாசாவில் நித்தியானந்தாவின் அறைக்கு கதவுகளே கிடையாதாம்...மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே நித்திக்கு கிடையாதாம்...யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தன் அறைக்கு வந்து எதைப் பற்றி வேண்டுமானாலும் நித்தியோடு கலந்துரையாட முடியுமாம்.
ஹால் ஊஞ்சலில் ஹாயாக படுத்துக் கொண்டு... பனி படர்ந்த மலையையும், கடலையும் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாராம் நித்தியானந்தா. உடனே அனைவரும் பனி மலையும் கடலும் எங்கே ஒன்றாக இருக்கிறது என கூகுளில் தேட ஆரம்பித்திருப்பார்கள் என்று நக்கலும் அடித்திருக்கிறார் நித்தி...

நிஜமாகவே கைலாசாவில் பனிமலையும் கடலும் ஒன்றாக இருக்கிறதா? இல்லை துப்பறியும் புலிகளை சுத்தலில் விட இதை எல்லாம் சொல்கிறாரா என்பது தெரியவில்லை. எதற்குமே தெளிவாக பதில் சொல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது நித்தியானந்தாவின் பிரமாண சிரிப்பு!

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

238 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

"கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" - ஐநா உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர் தகவல்

உலகளாவிய உணவு நெருக்கடி புறக்கணிக்கப்பட்டால் கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77 views

உக்ரைன் போர்... மாறும் உலகம் - அலர்ட் கொடுக்கும் அமெரிக்கா

உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்ற போராட்டத்தில் இருந்து பின்வாங்க கூடாது என அமெரிக்க பருவநிலைமாற்ற தூதுவர் ஜான் ஜெர்ரி வலியுறுத்தி உள்ளார்...

81 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.