ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?
பதிவு : ஜனவரி 23, 2022, 10:22 AM
ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரயில் விபத்தில் யானைகள் சிக்குவதை தடுப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

யானைகள் உயிரிழப்பை தடுக்க மலைப்பகுதியில் நவீன தொழில்நுட்பத்தை  பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க, தேனீக்களின் ரீங்காரம் மற்றும் புலியின் உறுமல் ஒலியுடன் கூடிய அலாரங்கள் வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும்,

இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதால், இதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
கோவை மற்றும் பாலக்காடு மண்டலங்களில் உள்ள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை யானைகள் கடக்க ஏதுவாக 8 கோடி ரூபாய் செலவில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

ரயில்கள் செல்லும் போது, தண்டவாளங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் அதனை தேடி யானைகள் அங்கு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ரயில்வே துறை, 

இதை தடுப்பது தொடர்பாக பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தெற்கு ரயில்வே நடவடிக்கை குறித்து ஆலோசனை தெரிவிக்க வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

58 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

38 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

28 views

பிற செய்திகள்

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

3 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

13 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

29 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

39 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

57 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.