உ.பி தேர்தல் - முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 15, 2022, 06:14 PM
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதி அங்கு முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஆளும் பாஜக வெளியிட்டு உள்ளது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளுக்கு 57 வேட்பாளர்களையும், 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் 55 தொகுதிகளுக்கு 48 வேட்பாளர்களையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் இன்று அறிவித்தார். இதன்படி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறை மேலவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அவர், தற்போது நேரடியாக தேர்தலில் களமிறங்கி உள்ளார். அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, சிரத்து (Sirathu) தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரகாண்ட் முன்னாள் ஆளுநர் பேபி ராணி மவுரியா, ஆக்ரா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும், முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தலில், பட்டியலினத்தில் 19 பேரும், ஓபிசி பிரிவில் 44 பேரும், பெண்கள் 10 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

497 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

134 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

69 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

36 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

24 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

9 views

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

11 views

திருடியது ஜெயிலர் மனைவி... போலீஸில் அடி வாங்கியது வேலைக்கார பெண் - ஆந்திராவில் நடந்த கொடுமை

ஆந்திராவில், ஜெயிலர் வீட்டில் திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணை, காவல் நிலையத்தில் கை கால்களை கட்டி வைத்து அடித்த நிலையில், பணத்தை எடுத்தது ஜெயலரின் மனைவி என தெரியவந்தது,

8 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

20 views

கேரளாவில் ஒரே நாளில் 45,136 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

10 views

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.