தேர்தல் பார்வையாளர்கள் கழுகு பார்வையுடன் செயல்பட வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்
பதிவு : ஜனவரி 15, 2022, 09:40 AM
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு  தலைமை தேர்தல் 
ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேசம் , உத்தரகாண்ட் , மணிப்பூர்,  கோவா,  பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ள ஐஏஎஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட  அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆய்வு கூட்டம் நடத்தியது. இந்த ஆய்வு கூட்டத்தில் சுமார் 1400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய 
தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேர்மையான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்வதில் தேர்தல் பார்வையாளர்கள் கழுகுப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.கொரோனா நோயாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு  தபால் வாக்குகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் தெரிந்து வைத்திருக்கும்படி தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள்,  பெண்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வாக்குச்சாவடி மையங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யும்படியும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினர்.தேர்தல் பார்வையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படியும் எந்த விதமான முக்கிய நிகழ்வுகளை ஏற்பட்டாலும் அதனை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துமாறு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கேட்டு கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

36 views

பிற செய்திகள்

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

திடீரென உரையை நிறுத்திய பிரதமர் மோடி - ராகுல் காந்தி கிண்டல்

உலக பொருளாதார கருத்தரங்கில் நேற்று பிரதமர் மோதி உரையாற்றி கொண்டிருந்த போது, இடையில் அவர் பேச்சு தடைபட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

24 views

மாநகராட்சி மேயர் ஒதுக்கீட்டில் அதிரடி

சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

14 views

முக கவசம் கட்டாயமில்லை - கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு

முக கவசம் கட்டாயமில்லை என்று கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

16 views

#Breaking : அணிவகுப்பு - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.