இந்தியா - தென் ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க வெற்றி
பதிவு : ஜனவரி 15, 2022, 12:33 AM
கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி வென்றுள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி வென்றுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவும், ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற 2வது டெஸ்டில், தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று 1-க்கு 1 என்ற கணக்கில் தொடர் சமனிலை பெற்றன.  இந்நிலையில், கேப்டவுனில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த அந்த அணி 4 ஆம் நாள் ஆட்டத்தில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டிப் பிடித்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி கைப்பற்றி உள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது தென்னாப்பிரிக்கா வீரர் கீகன் பீட்டர்சனுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

412 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

136 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

64 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

12 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022) | Morning Headlines | Thanthi TV

மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

24 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

13 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2022)

12 views

PRIME TIME NEWS | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சர்ச்சையில் போரிஸ் ஜான்சன் வரை (14-01-2022) இன்று

PRIME TIME NEWS | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சர்ச்சையில் போரிஸ் ஜான்சன் வரை (14-01-2022) இன்று

11 views

(14/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(14/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

21 views

PRIME TIME NEWS || பிரதமர் அவசர ஆலோசனை முதல் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி வரை (13-01-2022) இன்று

PRIME TIME NEWS || பிரதமர் அவசர ஆலோசனை முதல் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி வரை (13-01-2022) இன்று

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.