நாயை சுட்டபோது பெண் பலி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : ஜனவரி 13, 2022, 05:49 PM
தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பெரம்பலூர் மாவட்டம், எறையூரை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். எறையூர் பஞ்சாயத்தில் தெருநாய்களை சுட்டுக் கொல்வதற்காக நரிக்குறவர் நியமிக்கப்பட்டதாகவும், அவர் நாயை நோக்கி சுட்டதில், தனது தாய் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தாயின் மரணத்திற்கு காரணமான எறையூர் பஞ்சாயத்து தலைவர் குளஞ்சி, துணைத்தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜயா உயிரிழப்புக்கு நாய்களை சுட்டதே காரணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும்,தெருநாய்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்ட விரோதம் என்றும் தெரிவித்தது.விஜயா மரணத்திற்கு காரணமான மூவரும் சேர்ந்து 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாததால் தமிழக அரசு 5 லட்ச ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இந்த தொகையை விஜயாவின் வாரிசுகளுக்கு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டது.


தொடர்புடைய செய்திகள்

வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

58 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

13 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.

2 views

பிற செய்திகள்

#Breaking : புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு !

ஞாயிறு முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

10 views

தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் ! - மோடி குறித்து தரக்குறைவாக பேசியதாக தாக்குதல் !

பல்லடத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறி தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜக-வை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

11 views

"பொங்கல் பண்டிகை - கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை"

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது

9 views

சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்ததாக புகார் !

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

10 views

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம் !

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது...

13 views

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொதுமக்கள் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் பொதுமக்களால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.