ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு புகார்
பதிவு : ஜனவரி 12, 2022, 08:00 PM
சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஓரு புகாரின் பேரில் வழக்கு பதியப்பட உள்ளது.
சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஓரு புகாரின் பேரில் வழக்கு பதியப்பட உள்ளது.மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவம், மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகரிடம் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், மதுரை திருநகரில் வசித்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் இருவரும், சமூக ஊடகங்களில் ஆபாச பேச்சுகளை பேசுவதாக கூறியுள்ளார். தேசிய கீதத்தை தவறாக பாடியதாகவும், உடந்தையாக இருக்கும் சிக்கா என்ற சிக்கந்தர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை பெற்று கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையருக்கு மனுவை அனுப்பி வைத்துள்ளார். மனுவின் படி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கறிஞர் முத்துக்குமாரை, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி வழக்கறிஞர் முத்துக்குமார், நீலமேகம், முகமது ரஸ்வி, மேஜர்குமார், ராஜு ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஸ்ரீ பிரியா விசாரித்தார் . விசாரணையில் ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

491 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

129 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

பிற செய்திகள்

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

3 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

3 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

9 views

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

10 views

"மாஸ்க்கும் போட மாட்டேன்.. அபராதமும் செலுத்த மாட்டேன்..!!" - போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபர்

புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

8 views

தஞ்சையில் 85 இடங்களில் வாகன சோதனை - போலீஸார் தீவிர கண்காணிப்பு

தஞ்சையில் 85 இடங்களில் வாகன சோதனை - போலீஸார் தீவிர கண்காணிப்பு

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.