பொங்கல் பண்டிகை எதிரொலி - உச்சம் தொட்ட பூக்கள் விலை
பதிவு : ஜனவரி 12, 2022, 06:12 PM
வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகை காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. மேலும் பனிப்பொழிவால் உற்பத்தி சரிவடைந்துள்ளதால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 
ஒரு கிலோ கனகாம்பரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ முல்லைப்பூ ஆயிரத்து 600 ரூபாய்க்கும் காக்கரட்டான் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் சாதிப்பூ ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்துள்ள போதிலும் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் வாங்கிச்செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.