கைக்குழந்தையுடன் தண்டவாளத்தில் சிக்கிய தாய்- உயிர்தப்பிய பரபரப்பு காட்சி
பதிவு : ஜனவரி 12, 2022, 12:14 PM
வேலூர் ரயில் தண்டவாளத்தில் கைக் குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த  பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. இவர் தமது 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரயில் சந்திப்பிற்கு வந்துள்ளனர். அப்போது, நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இதனால் குழந்தையை தூக்க தாய் யுவராணி தண்டவாளத்தில் இறங்கினார். அப்போது  அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் யுவராணி மீது மோதியுள்ளது. இதில் தலையில் பலத்த காயத்துடன் தாய் மற்றும் குழந்தை ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதை தொடர்ந்து காட்பாடி ரயில்வே போலீஸார் தாய் மற்றும் குழந்தையை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது சி.எம்.சி மருத்துவமனையில் இருவரும் மேல் சிகிச்சை  பெற்று வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் கைக் குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக  காயங்களுடன்  உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

4 views

"சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

8 views

மது விற்பதாக கூறி ஆட்டோவில் சோதனை - அவமானம் ஏற்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அவமானம் தாங்காமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

9 views

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்

8 views

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

9 views

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.