"தமிழகத்தில் 5,392 போலீசார் தடுப்பூசி செலுத்தவில்லை"
பதிவு : ஜனவரி 12, 2022, 05:54 AM
சென்னையில் போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் காவல் துறையில் 5 ஆயிரத்து 392 போலீசார் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் காவல் துறையில் 5 ஆயிரத்து 392 போலீசார் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் பாதிப்பு ஏற்பட்டதைப்போல, தற்போதும் சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

ஒரே நாளில் 21 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காவல்துறையில் இதுவரை மொத்தம் 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி மட்டுமே உயிர்காக்கும் மருந்தாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், தமிழக காவல் துறையில் 5 ஆயிரத்து 392 போலீசார் இன்னும் ஒரு தடுப்பூசி டோஸ் கூட செலுத்திக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் காவல்துறையில் உள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 61 போலீசாரில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 669 போலீசார் முதல் டோசை செலுத்தியுள்ளனர் என்றும் இதில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 521 பேர் 2-வது டோசை செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை காவல்துறையில் உள்ள 21 ஆயிரத்து 215 போலீசாரில் 20 ஆயிரத்து 211 பேர் முதல் டோசும், 18 ஆயிரத்து 145 பேர் இரண்டாவது டோசும் செலுத்தியுள்ளனர் என்றும் ஆயிரத்து 4 போலீசார் ஒரு டோஸ் தடுப்பூசியைகூட செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் தடுப்பூசி செலுத்தாத போலீசார், மருத்துவ காரணங்களுக்காகவே தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் விரைவில் அனைத்து காவலர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

497 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

134 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

69 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

36 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

24 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

9 views

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

11 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

19 views

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 views

பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி

மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

11 views

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.