2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் களம்
பதிவு : ஜனவரி 12, 2022, 04:05 AM
403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல், 7 கட்டமாக பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அணிகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல், 7 கட்டமாக பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அணிகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வலுவான நிலையில் உள்ள பாஜக,  2017 சட்டமன்ற தேர்தலில் 39.67 சதவீத வாக்குகளை பெற்று, 312 இடங்களில் வெற்றி பெற்றது.  அதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் வெற்றி பெற்றன.

2022 சட்டமன்ற  தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணியை தொடரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக, யோகி ஆதித்யநாத் முன்நிறுத்தப்பட்டுள்ளார். 

2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து, 114 இடங்களில் போட்டியிட்டு, 6.25 சதவீத வாக்குகளை பெற்று, 7 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

2017 வரை உத்தர பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, 2017 தேர்தலில் 21.82 சதவீத வாக்குகளை பெற்று, 47 இடங்களில் வெற்றி பெற்றது.

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில், 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது. 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

2022 தேர்தலில், ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட 15 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாடி கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

நான்கு முறை உத்தர பிரதேச முதல்வாரக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, 2017 தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 22.23 சதவீத வாக்குகளை பெற்று 19 இடங்களில் வென்றது.

2022 சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் தனித்து களம் இறங்கியுள்ளது.2017 சட்டமன்ற தேர்தலில் சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட ஆறு இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து 140 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தன. 2022இலும் இந்த கூட்டணி தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

395 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

128 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

62 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

48 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

27 views

பிற செய்திகள்

கடும் குளிரில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி இந்தியா கேட் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் ராஜபாதையில் முப்படைகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

11 views

11 புதிய மருத்துவ கல்லூரிகள் - பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

32 views

டெல்லியில் ஒரே நாளில் 21,259 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21ஆயிரத்து 259 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022)

15 views

PRIME TIME NEWS | சேவல் சண்டைக்கு தடை முதல் ஹீரோ எலி மரணம் வரை (11-01-2022) இன்று

PRIME TIME NEWS | சேவல் சண்டைக்கு தடை முதல் ஹீரோ எலி மரணம் வரை (11-01-2022) இன்று

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.