11 புதிய மருத்துவ கல்லூரிகள் - பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
பதிவு : ஜனவரி 12, 2022, 01:41 AM
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று  மாலை 4 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதிய மருத்துவக் கல்லூரிகள் 4 ஆயிரம்  கோடி ரூபாய் மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதில் மத்திய அரசின் பங்களிப்பு 2 ஆயிரத்து 145 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர்,  திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 450 இடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தின்  அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் முழுமையான நிதியுதவியை கொண்ட புதிய வளாகம் 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழை  மேம்படுத்தும்  இந்த நிறுவனம்  'திருக்குறளை' பல்வேறு  இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி விழாவில் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

395 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

128 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

61 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

48 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

27 views

பிற செய்திகள்

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - கத்தியால் குத்தியதில் மாணவன் உயிரிழப்பு

அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழப்புக்கு பள்ளியின் ஆசிரியர்களின் கவனகுறைவுதான் தான் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

28 views

"முக கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம்"

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

22 views

ஆபாச செயலியால் பணத்தை இழந்த இளைஞர்

ஆபாச செயலியில் இழந்த பணத்தை மீட்க சென்ற இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம், தங்க சங்கிலியை பறித்து சென்ற மோசடி கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

9 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022)

12 views

PRIME TIME NEWS | சேவல் சண்டைக்கு தடை முதல் ஹீரோ எலி மரணம் வரை (11-01-2022) இன்று

PRIME TIME NEWS | சேவல் சண்டைக்கு தடை முதல் ஹீரோ எலி மரணம் வரை (11-01-2022) இன்று

8 views

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.