நண்பனை காப்பாற்ற முயன்ற போது விபரீதம் - கிருஷ்ணா நதியில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி
பதிவு : ஜனவரி 11, 2022, 02:55 PM
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற ஐந்து சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரலபாடு கிராமத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள், கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் ஒரு சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த 4 சிறுவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.  மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு வந்த மீட்பு குழுவினர், அஜய், சரண் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். மேலும் பாலயேசு, சன்னி,  ராகேஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர். ஒரே கிராமம், ஒரே பள்ளியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் சந்திரலபாடு கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பிற செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

இன்று முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும், ஏழு நாட்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை அமலாகிறது.

4 views

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

4 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (11-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (11-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

17 views

சபரிமலை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி... விமர்சையாக நடைபெறும் காட்சிகள்...

சபரிமலை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி... விமர்சையாக நடைபெறும் காட்சிகள்...

18 views

பிரதமர் பாதுகாப்பு விவகாரம் "பிரிட்டனில் இருந்து மிரட்டல்" - வழக்கு தொடர்ந்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக லாயர்ஸ் வாய்ஸ் அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது.

11 views

டெல்லி சிறைகளில் 114 பேருக்கு கொரோனா

டெல்லி சிறைகளில் 114 பேருக்கு கொரோனா

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.