வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் - பார்வையற்றவரிடம் ரூ.75 லட்சம் மோசடி
பதிவு : ஜனவரி 11, 2022, 08:45 AM
வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகார் குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முஸ்தாக் அகமது, வாகன விபத்தில் கண்பார்வையை இழந்தவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இருவர், முஸ்தாக் அகமதுவை அணுகி, துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு அழகுசாதன பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் தங்கள் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாக கூறி சுமார் 75 லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் திருப்பித் தராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முஸ்தாக் அகமது தபால் மூலமாக புகார் அனுப்பியுள்ளார். இதையடுத்து ஆம்பூர் காவல்நிலையத்தில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில், பணத்தை மீட்டு தருமாறு முஸ்தாக் அகமது கதறி அழுத‌து அங்கிருதவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பிற செய்திகள்

நேற்று ஒரே நாளில் 20,765 பேருக்கு பூஸ்டர் டோஸ்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 765 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

0 views

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - வாடிவாசல் அமைக்கும் பணியில் விழாக் குழுவினர்

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - வாடிவாசல் அமைக்கும் பணியில் விழாக் குழுவினர்

5 views

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.

6 views

ஃபாக்ஸ்கான் : ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளை கண்காணிக்க குழு அமைப்பு

ஃபாக்ஸ்கான் நிறுவனம் நாளை உற்பத்தியை தொடங்கவுள்ள நிலையில், ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளை கண்காணிப்பதற்காக வருவாய் துறை சார்பாக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

6 views

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி - ஆர்வலர்கள் கருத்து

நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் கருத்துகளை தற்போது காணலாம்.

8 views

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்.. எப்படி கையாள வேண்டும்? டிஜிபி அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்.. எப்படி கையாள வேண்டும்? டிஜிபி அறிவுறுத்தல்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.