பேருந்து நிலையத்தில் தவித்த 4 வயது சிறுவன் - தாயாக அரவணைத்த கூழ் விற்கும் பெண்
பதிவு : ஜனவரி 10, 2022, 06:06 PM
கள்ளக்குறிச்சியில் தனித்து விடப்பட்ட 4 வயது சிறுவனை கூழ் விற்கும் பெண் ஒருவர் தன் மகனை போல அரவணைத்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் தனித்து விடப்பட்ட 4 வயது சிறுவனை கூழ் விற்கும் பெண் ஒருவர் தன் மகனை போல அரவணைத்து வருகிறார்.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கலா என்ற பெண் கூழ் விற்பனை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இவரின் கடைக்கு கூழ் குடிக்க வந்த நபர் 4 வயது சிறுவனையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அப்போது கூழை குடித்த பிறகு சிறுவனை அங்கேயே விட்டு விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. உடனே கலா, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த சிறுவனுக்கு போலீசார் 2 உடைகளை வாங்கிக் கொடுத்து மீண்டும் கலாவிடமே ஒப்படைத்துள்ளனர். சிறுவனை விட்டுச் சென்றவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் சிறுவனை தன் குழந்தை போல பாவித்து பார்த்துக் கொள்கிறார் கலா. அவரின் சொல்பேச்சை கேட்டு சிறுவன் நடந்து கொள்வதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவனை விட்டுச் சென்றவர்களை கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில் அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்

ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

3 views

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

13 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

12 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.