கிரிப்டோ நாணயங்களில் கள்ள பரிவர்த்தனைகள் 1,400 கோடி டாலராக அதிகரிப்பு
பதிவு : ஜனவரி 09, 2022, 01:25 AM
2021இல் கிரிப்டோ நாணயங்கள் மூலம் நடைபெற்ற சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளின் அளவு 1,400 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக செயின் அனலைசிஸ் என்ற ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
2021இல் கிரிப்டோ நாணயங்கள் மூலம் நடைபெற்ற சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளின் அளவு 1,400 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக செயின் அனலைசிஸ் என்ற ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ நாணயங்களை block chain இணைய தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. 
இவற்றை எந்த நாட்டினாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கிரிப்டோ நாணயங்களின் பரிவர்த்தனை அளவு, 2021இல் 15.8 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாக செயின் அனலைசிஸ் நிறுவனம் வெளியிட்ட, 2022 கிரிப்டோ குற்றங்கள் அறிக்கை கூறுகிறது. உலகெங்கும், வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் மூலம் திரட்டப்படும் பல ஆயிரம் கோடி டாலர் அளவிலான கருப்பு பணம் கிரிப்டோ நாணயங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. கிரிப்டோ நாணயங்களில் அனுப்பட்ட கருப்பு பணத்தின் அளவு 2020இல் 780 கோடி டாலராக இருந்து 2021இல் 1,400 டாலராக அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.