சென்னையில் ரூ.4.15 கோடி மோசடி..மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
பதிவு : ஜனவரி 08, 2022, 09:33 AM
சென்னையில் 2 கோடி மதிப்புள்ள இடத்தையும், 2.15 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவில்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம், 
 சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், அவரது மனைவி லட்சுமி, சுரேஷ்பாபு, அவரது மனைவி காமாட்சி ஆகியோர் தங்களது வீட்டை விற்பதாக கூறினர். வீட்டை விற்பதற்கு கிரைய தொகையாக 3 கோடியே 15 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்து கணேஷிடம் ஒப்பந்தம் போட்டனர். பின்னர், கணேஷுக்குச் சொந்தமான 2 கோடி மதிப்புள்ள வீட்டையும் வெங்கடேசன் பெயரில் கிரையம் செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கணேஷுக்குச் சொந்தமான வெங்கடேசனுக்கு கிரையம் செய்து கொடுத்த வீட்டின் பெயரில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 1 கோடி கடன் பெற்று அந்த தொகையையும் சேர்த்து மொத்தம் 4.15 கோடி ரூபாயை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வெங்கடேசன், சுரேஷ் பாபு மற்றும் காமாட்சி ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தலைமறைவாக இருந்த லட்சுமியை கே.கே.நகர் பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

143 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

2 views

"எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" - சசிகலா | #ThanthiTv

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

4 views

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா- மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை ! | #ThanthiTv

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாகக் கருதுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

8 views

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு ! | #ThanthiTv

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நூலகம், ஆராய்ச்சி கூடங்களை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர்

14 views

திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.