பத்திரிகையாளரை மிரட்டியதாக விஜயகாந்த் மீது தொடர்ந்த வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜனவரி 07, 2022, 08:59 AM
பத்திரிகையாளரை மிரட்டியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பத்திரிகையாளரை மிரட்டியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சம்பவம் நடந்த போது இருந்த மன அழுத்தம் மற்றும் பிற காரணங்களுக்காக புகார் அளித்ததாகவும், பின்னர் சமரசம் ஏற்பட்டு விட்டதால்  வழக்கை ரத்து செய்வதில் ஆட்சேபனை இல்லை என பத்திரிகையாளர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.