சட்டப் பேரவை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புக்கு வரவேற்பு - மக்கள் நீதி மய்யம் கட்சி வாழ்த்து
பதிவு : ஜனவரி 07, 2022, 08:07 AM
சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது வரவேற்புக்குரியது என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது வரவேற்புக்குரியது என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் டுவிட்டர் பக்க பதிவில், சட்டப் பேரவை நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யுமாறு, தங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறியுள்ளது. தற்போது, பேரவை நிகழ்வு, நேரடிஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது என கூறியுள்ள பதிவில், தமிழக அரசுக்கு வாழ்த்துகள் என்றும், சட்டப் பேரவையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பாவதையும், யூ-டியூப் சேனலில் அந்தக் காட்சிகள் இடம்பெறுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.