தேர்தல் செலவு உச்சவரம்பு அதிகரிப்பு
பதிவு : ஜனவரி 07, 2022, 08:03 AM
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு உச்சவரம்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி ஹரிஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்தது. 

இந்த குழு அளித்த பரிந்துரைகள் படி, தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் படி, மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு பெரிய மாநிலங்களில் 70 லட்ச ரூபாயிலிருந்து 90 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறிய மாநிலங்களில் ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் செலவு தற்போதைய 54 லட்சத்திலிருந்து 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதைப்போல சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தற்போதைய 28 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சிறிய மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு உச்சவரம்பு தற்போதைய 20 லட்சத்தில் இருந்து 28 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டு மத்திய சட்டத்துறை அமைச்சகமும் இதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் பெரிய மாநிலம் என்பதால் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவு உச்ச வரம்பு 95 லட்சமாகவும் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவு உச்ச வரம்பு 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் செலவு உச்ச வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

9 views

"சோதனை நடத்த வாருங்கள்"

சோதனை நடத்த வர வேண்டும் என, அமலாக்கத் துறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

11 views

"சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்" - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னை - சேலம் 8 வழிச்சாலை குறித்து தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

16 views

#BREAKING || பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"அகில இந்திய ஆட்சி பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள்"

27 views

மாணவி மரணம் விவகாரம் - "அண்ணாமலையின் குற்றச்சாட்டு, மதவாத சக்திகளின் பொய் முழக்கத்தின் ஒரு பகுதி"

தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதவாத சாயம் பூசுவதாக தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி கோரியுள்ளார்.

20 views

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.