மற்ற மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன?
பதிவு : ஜனவரி 05, 2022, 06:58 PM
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த 2 வாரங்களுக்கு கடைகள் மற்றும் உள்ளரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் உள்ளரங்குகள், திருமண மண்டபங்களில் 50 சதவீதம் பேருடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் கோவாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளி,கல்லூரிகள், அழகு நிலையங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதுடன், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

129 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

பிற செய்திகள்

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

7 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.

9 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

12 views

பிப்.7 முதல் ஏலம் விடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

8 views

கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.

15 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.