முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
பதிவு : ஜனவரி 05, 2022, 01:52 PM
தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஹசனில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வந்தனர். மேலும், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹசனில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே, ராஜேந்திர பாலாஜி எங்கே என்பது குறித்து அவரது நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனிடம் விசாரணை நடத்தினர்.

முன்னதாக முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த முன் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

300 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

109 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

36 views

பிற செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2022) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2022) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

50 views

விமான நிலையத்தில் துப்பாக்கி பறிமுதல் - காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கேரள காங்கிரஸ் பிரமுகர் மீது இந்திய ஆயுத தடைச்சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 views

பல்கலை. வேந்தராக தொடர விரும்பவில்லை - கேரள ஆளுநர் கருத்தால் சர்ச்சை

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

11 views

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

98 views

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு என கூறும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

9 views

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் - பாஜகவில் 1000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பனு பெற்றவர்களுக்குன் இன்று முதல் நேர்காணல் நடைபெற உள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.