இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
பதிவு : ஜனவரி 05, 2022, 07:19 AM
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. கடும் கட்டுப்பாடுகளோடு இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக கலைவாணர் அரங்கம் வரும் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று அழைத்து செல்வார். இதனையடுத்து இந்தாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்துவார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இந்த கூட்டத்திற்கு பின்பு சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.


பிற செய்திகள்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

11 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

7 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

15 views

முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு திடீரென சென்ற ஈ.பி.எஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார்.

15 views

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.