கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை - தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்
பதிவு : ஜனவரி 05, 2022, 02:52 AM
திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி பெற்ற தலைவர்களின் சிலை, பூங்கா அமைத்து பராமரிக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்து அதிகம் நடக்கும் பகுதியில், கருணாநிதி சிலை வைக்க திட்டமிடப்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது என்றும் எழுதியிருந்தார். இதுகுறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி அளித்த விண்ணப்பத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவை  பின்பற்றி, மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.