கடலில் மீனவர்கள் இடையே மோதல் - 4 மீன்பிடி படகுகளுக்கு தீ வைப்பு
பதிவு : ஜனவரி 05, 2022, 01:17 AM
ஆந்திராவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், நான்கு மீன்பிடி படகுகளுக்கு ஒரு தரப்பினர் தீவைத்தனர்.
ஆந்திராவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், நான்கு மீன்பிடி படகுகளுக்கு ஒரு தரப்பினர் தீவைத்தனர்.

விசாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே இன்று மீண்டும், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் பயன்படுத்திய 4 மீன்பிடி படகுகளுக்கு தீவைத்தனர். இதனை அறிந்த கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர்களை அனுப்பி தீ வைக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். இதுதொடர்பாக விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.