ஜோடியாக கைதான ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் - யூடியூப் பக்கம் முடக்கமா?
பதிவு : ஜனவரி 05, 2022, 12:21 AM
சமூக வலைதளங்களில் பெண்களையும், குழந்தைகளையும் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் கைதாகியுள்ளனர். இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பெண்களையும், குழந்தைகளையும் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் கைதாகியுள்ளனர். இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

திருப்பூரை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணும், சிக்கந்தர் என்பவரும் யூடியூப் சேனல் நடத்தி வந்தனர். இவர்கள் பெண்கள் குழந்தைகளை ஆபாசமாக பேசுவதாக பல மாதங்களாக குற்றச்சாட்டு எழுந்து வந்தன. இவர்களை கண்டித்து  கோவை பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த திலகா-முத்து தம்பதியினர், தங்கள் யூடியூப் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் திலகாவின் உருவம் குறித்து கொச்சை சொற்களால் திட்டியும், அவரது செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் அட்டகாசம் செய்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த திலகா, முத்து தம்பதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கவே, மதுரையில் தலைமறைவாக இருந்த சிக்கந்தர் மற்றும் சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவர்களின் யூடியூப் பக்கத்தை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.