மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - விரைவில் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 05, 2022, 12:09 AM
சென்னை அண்ணா சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும்,  ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென முதலமைச்சருடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில சுகாதாரத்துறையினர் பரிந்துரைத்தனர். இதன்படி, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும், கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கவும் சுகாதாரத்துறை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.