ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை
பதிவு : ஜனவரி 04, 2022, 07:01 AM
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த காரணத்தால் புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை வழக்கம் போல் சட்டப்பேரவையில் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சட்டப்பேரவை  நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை  செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி நாளை சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதற்காக நாளை காலை கலைவாணர் அரங்கம் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் வரவேற்பார்கள். மேலும், இம்முறை கேள்வி நேரம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரை உள்ளிட்டவை நேரலையாக ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

63 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

35 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

பிற செய்திகள்

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

7 views

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

16 views

முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு திடீரென சென்ற ஈ.பி.எஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார்.

23 views

தமிழிசையை அவதூறாக விமர்சித்த வழக்கு... ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

11 views

"தஞ்சை மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" - குஷ்பு, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார்.

306 views

"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து

"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.