பெண்கள் திருமண வயதை உயர்த்தும் மசோதா - ஆய்வு செய்யும் நிலைக்குழுவில் ஒரே ஒரு பெண்...
பதிவு : ஜனவரி 04, 2022, 02:43 AM
பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நிலைக்குழுவில், ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நிலைக்குழுவில், ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்களின் திருமண வயதை 18 இல் இருந்து 21ஆக அதிகரிக்க, குழந்தை திருமணம் தடைச்சட்ட திருத்த மசோதா, கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பட்டது.

31 எம்.பிகள் கொண்ட இந்த நிலைக்குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே உள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு, சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதியுள்ளார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் வாழ்வியல் தொடர்பான ஒரு முக்கிய மசோதாவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றிருப்பது மனச்சோர்வையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்தத் கடித்தத்தில் தெரிவித்துள்ள பிரியங்கா சதுர்வேதி, அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பிகளை இந்த நிலைக்குழுவில் சேர்க்கும்ப்படி கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் எம்.பியான, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவும் கூட, இதே கவலைகளை முன் வைத்துள்ளார். அனைத்து பெண் எம்.பிகளின் கருத்துகளும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த நிலைக்குழுவிற்கான உறுப்பினர்களை அரசியல் கட்சிகள்தான் முன்மொழிகின்றன என்றும் அப்படி முன் மொழியும் போதே அரசியல் கட்சிகள் ஏன் பெண் உறுப்பினர்களின் பெயரை முன்மொழிவதில்லை என்பது தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.