புகார் கூற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டாய கருக்கலைப்பு செய்த காவல் எஸ்.ஐ
பதிவு : டிசம்பர் 05, 2021, 08:40 PM
கன்னியாகுமரி மாவட்டம் பழுகல் பகுதியில் பாலியல் பலாத்கார விவகாரத்தில் குழித்துறை நீதிமன்ற உத்தரவின் படி, காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்கோடு பகுதியை சேர்ந்த ஜோஸ்பின் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அஜீஸ் என்பவர் பணம், நகைகளை வாங்கி விட்டு பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் பழுகல் காவல்நிலையத்தில் ஜோஸ்பின் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் என்பவர், ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமாக இயல்பாக பேசி வந்துள்ளார். பின்னர், போக போக பேச்சில் மாற்றம் ஏற்பட்டு ஆபாசமாக பேச துவங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம், ஜோஸ்பினை வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த ஜோஸ்பினுக்கு கட்டாயமாக  கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக, ஜோஸ்பினை காவல் ஆய்வாளர் சுந்தரலிங்கம் மிரட்டியுள்ளார்.  

தாம் முற்றிலும் ஏமாற்றபட்டதை அறிந்த ஜோஸ்பின் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஐஜி, ஐஜி என அனைவருக்கும் புகார் அளித்துள்ளார். பின்னர், குழித்துறை நீதிமன்றத்தில் ஜோஸ்பின் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குழித்துறை நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மற்றும் அதற்கு துணை போன பழுகல் காவல்நிலைய தலைமை காவலர் கணேசன், அடியாட்களான விஜின், அபிஷேக், உமேஷ், கருக்கலைப்பு செய்த மருத்துவர் கார்மல் ராணி, மருத்துவமனை உரிமையாளர் தேவராஜ், மற்றும் அனில்குமார் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, மார்த்தாண்டம் மகளிர்  காவல்நிலைய ஆய்வாளர் ஞானபிரகாசி, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து, கொலை மிரட்டல் விடுத்த காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றமே வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிற செய்திகள்

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

12 views

"பழனி கோவிலில் இதுவரை 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்"

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

18 views

ஜன.24 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு? - இன்று மாலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வருகிற 24ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

13 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

20 views

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

13 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.