ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி
பதிவு : டிசம்பர் 05, 2021, 05:57 PM
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். குறிப்பாக பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து எதிரிகளை வெற்றி பெற விடாமல் அதிமுகவை இரும்புக் கோட்டையாக காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.