கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் - "லேசான காய்ச்சல் மட்டுமே"
பதிவு : டிசம்பர் 04, 2021, 05:40 PM
கர்நாடகாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுதலுக்குள்ளான மருத்துவர் ஒருவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுதலுக்குள்ளான மருத்துவர் ஒருவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட புதிய ரக உருமாறிய கொரோனா வைரஸை கவலையளிக்கும் 
விஷயமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.  டெல்டா வைரஸை விட வீரியம் அதிகம் கொண்ட இந்த வைரஸ், வேகமாக பரவும் என்று கருதப்படுவதால், இந்தியா மற்றும் இதர நாடுகளில் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன் முறையாக ஒமிக்ரான் தொற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இரண்டு பேருக்கு  ஏற்பட்டது கண்டறியபட்டது. அவர்களில் ஒருவர் அரசு மருத்துவர். அந்த மருத்துவரும் அவருடன் தொடர்பில் இருந்து ஐந்து பேரும் ஒரு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அரசு மருத்துவர்கள் ஆவார்கள். மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட இந்த ஆறு பேருக்கும், லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பாராசிடாமல் மாத்திரைகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் கொரோனா அறிகுறிகள் ஏற்படவில்லை என்று கூறினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.