"7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"
பதிவு : டிசம்பர் 04, 2021, 12:46 PM
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

04.12.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

 05.12.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

06.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

07.12.2021:  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.12.2021: தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை 

அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
எடப்பாடி (சேலம்), மோகனுர் (நாமக்கல்) தலா 9, வெம்பக்கோட்டை (விருதுநகர்) 8, மேட்டூர்  (சேலம்) 7, கரூர் 6, திருச்செங்கோடு (நாமக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), சேலம் தலா 5, நாகர்கோயில் (கன்னியாகுமாரி), சிவகாசி  (விருதுநகர்) தலா 4, வாடிப்பட்டி (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 3, வால்பாறை (கோவை) , ராஜபாளையம் (விருதுநகர்) , குன்னூர்  (நீலகிரி) , தேக்கடி (தேனீ) , தாளவாடி (ஈரோடு) , சின்னக்கல்லார் (கோவை) தலா 2, பரமத்திவேலூர் (நாமக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), பேச்சிப்பாறை  (கன்னியாகுமாரி), திருமங்கலம் (மதுரை) , ஓமலூர் (சேலம்) , சத்தியமங்கலம்  (ஈரோடு), சோழவந்தான் (மதுரை), நாமக்கல் தலா 1.

     மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும். 

இதன் காரணமாக

04.12.2021: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70  கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.12.2021: : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி,   ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில்  புயல் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

9 views

யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்தது வேட்டையாடிய 2 பேர் கைது

தேனி ஆருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 views

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

23 views

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.